மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் யுனிட்ஹோல்டர்களுக்கு வரி சலுகைகள் அளிப்பது குறித்த வெளியீடுகள், 31/01/08 தேதியிட்ட வரி சட்டங்களுடன் இணங்கும். கீழே தெரிவிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும், UTI Mutual Fund -இன் வரி சட்டங்களின் அடிப்படையிலானது, அத்துடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை (திட்டங்கள்) பற்றிய பொதுவான தகவல்களை முதலீட்டாளர்களுக்கு கொடுக்கும் நோக்கத்திற்காக மட்டும் வெளியிடப்படுகிறது. வரியின் நிலையைப் பொறுத்து முதலீடு செய்யும் நேரத்தில், எந்த திட்டங்களின் முதலீட்டிற்கும் உத்தரவாதம் அளிக்கப்படாது.
வரி சலுகைகள் பற்றி கீழே குறிப்பிட்டப்பட்ட கூற்றுகள் யாவும் கருத்துக்களை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டவை, மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்களை நேரடியாகவோ அல்லது இரண்டாம்நிலை சந்தையில் மற்ற நபர்கள் மூலம் மறைமுகமாகவோவவங்குவதற்கு பரிந்துரைக்கும் நோக்கத்தில் வழங்கப்படவில்லை. எதிர்கால முதலீட்டாளர்கள் இந்தப் பிரிவுகளின் உள்ளடக்கங்களை, வழங்கு ஆவணமாகக் கருதி, இவற்றை அடிப்படையாகக் கொண்டு சட்டம், வரி, முதலீடு தொடர்பாக எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது. தங்களுடைய சொந்த வரி ஆலோசகரை அணுகி திட்டத்தில் பங்கு பெறுவது குறித்து ஆலோசனை பெற வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட் குறித்த வரி சிக்கல்கள்:
UTI Mutual Fund என்பது SEBI -உடன் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட். இது வருமான வரி சட்டம், 1961 (“the Act”) பிரிவு 10 (23D) -இன் கீழ் முழு வருமானமும் வருமான வரியிலிருந்து விலக்கு பெற தகுதி பெறுகிறது. சட்டப் பிரிவு 196(v) உடன்படிக்கையின் கீழ், எந்த வரி பிடித்தமும் இல்லாமல் அனைத்து வருமானத்தையும் மியூச்சுவல் ஃபண்ட் பெறுகிறது.
சொத்து வரிச் சட்டம் 1957 பிரிவு 45 -இன்
நெறியின்படி, மியூச்சுவல் ஃபண்ட்டின் நிகர சொத்துக்கு சொத்து வரி வசூலிக்கப்படுவதில்லை. எனவே, UTI Mutual Fund -க்கும் சொத்துவரிச் சட்டம் 1957 -இன் கீழ் சொத்து வரி செலுத்த வேண்டியதில்லை.
யுனிட் ஹோல்டர்கள் குறித்த வரி சிக்கல்கள்
1. ஈக்விட்டி சார்ந்த ஃபண்ட்கள் - முதலீடுகளின் வரி செயல்முறை
அ. யுனிட்களால் பெறும் வருமானத்தில் வரி
சட்டப் பிரிவு 10(35) -இன் படி, எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர் வருமானம் பெற்றாலும், அவர்களுக்கு யுனிட் ஹோல்டர்கள் மூலம் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆ. டிவிடெண்ட் விநியோக வரி:
115 (R) (2) சட்டப்பிரிவு நெறியின் படி, ஈக்விட்டி சார்ந்த திட்டங்கள் வருமான விநியோக வரியிலிருந்து விலக்கு பெறுகிறது. சட்டப்பிரிவு 115T -இன் படி, சார்ந்திருக்கும் ஃப்ண்ட் என்பது ஈக்விட்டி பங்குகளை உள்நாட்டு நிறுவனங்களின் மொத்த லாபத்தில் அறுபத்து ஐந்து சதவீதத்திற்கு மேலாக முதலீடு செய்யக்கூடிய ஃபண்ட்கள் ஆகும்.
இ. யுனிட்கள் வருவாயில் TDS:
சட்டப் பிரிவு 194K மற்றும் 196A -இன் படி, 2003 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பின் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செலுத்தப்பட்ட தொகைக்கு வரி செலுத்தத் தேவையில்லை.
ஈ. முதலீடு லாபத்தில் வரி
(i) நீண்ட கால முதலீட்டு லாபங்கள்
சட்டப்பிரிவு 10(38) -இன் படி, நீண்ட கால முதலீட்டு சொத்தினை மாற்றுவது மூலம் வருமானம் பெறப்படும்போது, ஈக்விட்டி யுனிட் சார்ந்த திட்டத்திற்கு மொத்த வருமானத்தின் பகுதியை, பங்குகள் மாற்று வரி (STT) உருவாக்காது, எனவே வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. சட்டப்பிரிவு 10(38) -இன் படி ஈக்விட்டி சார்ந்த ஃபண்ட் என்பது, ஈக்விட்டி சார்ந்து முதலீடு செய்யக்கூடிய பங்குகள் உள்நாட்டு நிறுவனங்களின் மொத்த லாபத்தில் அறுபத்து ஐந்து சதவீதம் முதலீடு செய்யப்பட வேண்டும். அத்துடன் இது வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 10(23D) -இன் படி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
(ii) குறைந்த கால முதலீட்டு லாபங்கள்
12 மாதங்களுக்கு மேல் வைக்கப்படாத யுனிட்கள் குறைந்த கால முதலீடு சொத்துக்கள் ஆகும். முதலீடு லாபங்கள் குறைந்த கால முதலீடு சொத்துக்களிலிருந்து மாற்றப்படுவதற்கு ஒரு ஈக்விட்டி சார்ந்த திட்டத்தின் சட்டப்பிரிவு 111 A -இன் கீழ் யுனிட் STT -க்கு வருமான வரி 10% விதிக்கப்படும். கூறப்பட்ட வரி விகிதம் பொருந்துமானால். கூடுதல் கட்டணத்தால் அதிகரிக்கப்படலாம்.
(iii) பங்குகள் பரிமாற்ற வரி (STT)
நிதி (எண். 2) சட்டம், 2004 பிரிவு VII -இன் படி பங்குகள் மாற்று வரி (STT) தொடர்பாக, 2006, ஜுன் 01 முதல் மியூச்சுவல் ஃபண்டின் ஈக்விட்டி சார்ந்த திட்டத்தில் STT விற்பனையாளரால் 0.25% விகிதம் யுனிட்டின் விற்பனைக்கு பணம் செலுத்தப்படுகிறது. STT மியூச்சுவல் ஃபண்டின் மூலத்திலிருந்து சேகரிக்கப்படுகிறது.
வருமான வரி சட்டம் 1961 பிரிவு 88E இன் படி, சொத்துடையவரின் மொத்த வருமானத்தில் முந்தைய ஆண்டின் வருமானம் சேர்க்கப்பட்டால், வரியுள்ள பங்குகள் பரிமாற்றத்திலிருந்து "லாபங்கள் மற்றும் தொழில் அல்லது துறையின் லாபங்கள்" என்பதன் கீழ் வரி விதிக்கப்படும். சொத்துடையவர், வருமானத்தில் சில பரிமாற்றங்களில் வருமான வரி தொகையிலிருந்து வரி விலக்கிற்குத் தகுதியுள்ளவராவார். இது பிரிவு 88E -இன் படி கணக்கிடப்படுகிறது, சொத்துடையவரால் வரி செலுத்தக்கூடிய பங்குகள் பரிமாற்றங்களுக்கு முந்தைய ஆண்டில் தொழிலுக்கு உள்ளிடப்பட்ட ஒரு தொகை பங்குகள் பரிமாற்று வரி செலுத்துவதற்குச் சமமாகும்.
உ. முதலீடு லாபத்தில் வரிச்சலுகை
(i) உள்நாட்டு முதலீட்டாளர்கள்
ஆகஸ்ட் 1995, சுற்று எண்.715 -இல் Central Board of Direct Taxes (‘CBDT’) -இன் படி, உள்நாட்டு யுனிட் ஹோல்டர்களின் யுனிட்களை மீட்கும் போது முதலீடு லாபங்களிலிருந்து கழிக்க அவர்களுக்கு வரி அவசியமில்லை.
(ii) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு
நீண்ட கால முதலீட்டு லாபங்கள்
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, நீண்ட கால முதலீடு லாபங்களிலிருந்து ஒரு ஈக்விட்டி சார்ந்த ஃபண்டில் யுனிட்களை மீட்கும்போது வரி என எதுவும் செலுத்தப்படுவதில்லை.
குறைந்த கால முதலீட்டு லாபங்கள்
நிதிச் சட்டம் 2007 -க்கு {வகை 1 (b) (i) (C)} முதல் திட்டத்தின் பகுதி 2 -இன் படி, மியூச்சுவல் ஃபண்ட் குறைந்த கால முதலீடு லாபங்களில் 10% வரி விதிப்பு செய்யப்படுகிறது. தேவையான கூடுதல் கட்டணங்களுக்கு வரி சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
(iii) ஒரு நிறுவனமாக இருந்தால்
ஒரு உள்நாட்டு நிறுவனம் தவிர மற்றவை:
நீண்ட கால முதலீடு லாபங்கள்
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, நீண்ட கால முதலீடு லாபங்களிலிருந்து ஒரு ஈக்விட்டி சார்ந்த ஃபண்டில் யுனிட்களை மீட்கும் போது வரி என எதுவும் செலுத்தப்படுவதில்லை. குறைந்த கால முதலீட்டு லாபங்கள்
நிதிச் சட்டம் 2007 -க்கு {வகை 2 (b) (vii)} முதல் திட்டத்தின் பகுதி 2 -இன் படி, மியூச்சுவல் ஃபண்ட் குறைந்த கால முதலீடு லாபங்களில் 10% வரி விதிப்பு செய்யப்படுகிறது. பொருத்தமான கூடுதல் கட்டணங்களுக்கு வரி விலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
(iv) வெளிநாட்டு ஸ்தாபன முதலீட்டாளர்கள் (FIIs) :
வெளிநாட்டு ஸ்தாபன முதலீட்டாளர்கள்களுக்கு (FIIs), சட்டப்பிரிவு 196 D (2) -இன் கீழ் முதலீட்டு லாபத்திலிருந்து யுனிட்களை மீட்கும் போது வரி என எதுவும் செலுத்தப்படுவதில்லை.
கல்வி வரி மற்றும் கூடுதல் கட்டணம்:
பொருத்தமான கூடுதல் கட்டணங்களுக்கு வரி / வரிவிலக்கு (STT தவிர) அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி வரி 2%, உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வரி 1% வரி மற்றும் கூடுதல் கட்டண தொகையாக வசூலிக்கப்படுகிறது.
ஓய்வுகால அனுகூலத் திட்டம் , யுனிட் இணைந்த காப்பீட்டுத் திட்டம், ஈக்விட்டி இணைந்த சேமிப்புத் திட்டம் :
பிரிவு 80 C பங்களிப்பு கீழ்
தனிநபர் மற்றும் HUF -கள் மேலே உள்ள திட்டங்களில் முதலீடு செய்த முழு தொகைக்கும், அதிகபட்சமாக ரூபாய் 1,00,000/- வரை செலுத்தப்பட்ட தொகைக்கு வருமான வரி சட்டம் 1961, பிரிவு 80 C கீழ் வரி சலுகை அளிக்கப்படுகிறது
.
II. ஈக்விட்டி சார்ந்த ஃபண்ட்கள் தவிர மற்றவை - முதலீடுகளின் வரி முறை
யுனிட் ஹோல்டர்கள் குறித்த வரி சிக்கல்கள்
அ. யுனிட் அடிப்படையில் வருமானத்தில் வரி
சட்டப்பிரிவு 10(35)இன் படி, முதலீட்டாளரால் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் பெறப்பட்ட வருமானத்திற்குப் பெறுநர் யுனிட் ஹோல்டரால் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆ. டிவிடெண்ட் பங்கீட்டு வரி::
(i) மணி மார்க்கெட் மற்றும் லிக்விட் திட்டங்களுக்கு:
சட்டப்பிரிவு 115R -இன் படி, மணி மார்கெட் மற்றும் லிக்யூட் ஃபண்ட்களுக்கு டிவிடென்ட் விநியோக வரி 25% மற்றும் கூடுதல் கட்டணம். (ii) மணி மார்க்கெட் மற்றும் லிக்விட் திட்டங்கள் தவிர மற்ற திட்டங்களுக்கு:
சட்டப்பிரிவு 115R -இன் படி, வருமான விநியோக வரி
12.5% மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவை தனிநபர் அல்லது HUF க்கும் விதிக்கப்படும் வேறு எந்த நபருக்கும் 20% மற்றும் கூடுதல் கட்டணமும் விதிக்கப்படும்.
இ. வருமான யுனிட்களில் வரிச்சலுகை
சட்டப் பிரிவு 194K மற்றும் பிரிவு 196Aஇன் படி, 2003, ஏப்ரல் 1 அன்று அல்லது அதற்கு பின் ஒரு மியூச்சுவல் ஃபண்ட்டில் வருமானம் செலுத்தப்பட்டால், வரி எதுவும் விதிக்கப்படாது.
ஈ. முதலீட்டு லாபத்தில் வரி
(i) நீண்டகால முதலீடு லாபங்கள்
உள்நாட்டு முதலீட்டாளர்கள்
எந்த நீண்ட கால முதலீட்டு லாபம் குடியுரிமையுள்ளவர்களால் யுனிட்கள் மீட்கப்படும் போது சட்டப்பிரிவு 48 மற்றும் 112யின் கீழ் குறிக்கப்பட்டது. நீண்ட கால முதலீடு லாபங்களில் யுனிட்களை 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால் 20% வரி விதிக்கப்படுகிறது, விலை பணவீக்கம் அறிகுறிக்கு அல்லது 10% இண்டக்ஸேஷன் இல்லாமல் வரி என இதில் எது குறைவோ அது விதிக்கப்படும். கூறப்பட்ட வரி விகிதம் பொருந்துமானால், கூடுதல் கட்டணத்தால் அதிகரிக்கப்படும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
வெளிநாட்டு யுனிட் ஹோல்டர்கள் சட்டப்பிரிவு 115 E இன் கீழ் வெளிநாட்டு இந்தியரின் வருமானம் நீண்ட கால லாபங்களாக இருந்தால், யுனிட்களுக்கு 20% மற்றும் கூடுதல் கட்டணம் எதுவும் பொருந்துமானால் வசூலிக்கப்படும். அத்தியாயம் XIIA வெளிநாட்டு இந்தியர்களின் வரி தொடர்பாக தெளிவாக விளக்குகிறது. வருமான வரி சட்டம், பிரிவு 115 Dஇன் கீழ் வெளிநாட்டு இந்தியர் இண்டக்ஸேஷன் சலுகையைப் பெற முடியாது
மாற்று முதலீடு லாபங்களில் வெளிநாட்டவருக்கு அது அவர்களுக்கு அதிக லாபத்தைக் கொடுத்தால், பிரிவு 112 இன் கீழ் வரி விதிக்கப்படும். சட்டப்பிரிவு 112 இன் கீழ், நீண்ட கால முதலீடு லாபங்கள் 20% வரியும் கூடுதல் கட்டணமும் விதிக்கப்படும். இண்டக்ஸ்சேஷனில் சலுகையும் வெளிநாட்டவருக்கு வருமான வரி சட்டம் பிரிவு 48 இன் கீழ் கிடைக்கும். குறைந்த கால முதலீடு சொத்தில் இயல்பான வருமானத்தைப் போல வரி விதிக்கப்படும்.
FIIகள்
சட்டப்பிரிவு 115 AD -இன் படி, நீண்ட கால முதலீடு லாபங்களுக்கு யுனிட்களை விற்பனை செய்யும் போது 10% வரியும் மற்றும் குறைந்த கால லாபங்களுக்கு 30% வரியும் விதிக்கப்படுகிறது. இந்த லாபங்கள் பிரிவு 48இன் முதல் மற்றும் இரண்டாம் நிபந்தனைகளின் இண்டக்ஸ்ஷேசன் சலுகை இல்லாமல் கணக்கிடப்படும், எனினும் இது FIIகளுக்குப் சட்டப்பிரிவு 115 AD (3)இன் படி பொருந்தாது. பொருந்தக்கூடிய வரி விகிதங்கள் கூடுதல் கட்டணங்களை பொருத்து அதிகரிக்கப்படும்.
(ii) குறைந்த கால முதலீடு லாபங்கள்
12 மாதங்களுக்கு மேல் வைக்கப்படாத யுனிட்கள் குறைந்த கால முதலீடு சொத்துக்கள் ஆகும். முதலீடு லாபங்கள் குறைந்த கால முதலீடு சொத்துகளிலிருந்து மாற்றப்படுவதற்கு சாதாரணமான விகிதத்தில் சொத்துடையவருக்கு வரி விதிக்கப்படும்.
உ. முதலீடு லாபத்தில் வரிச்சலுகை
(i) உள்நாட்டு முதலீட்டாளர்கள்
ஆகஸ்ட் 1995, சுற்று எண்.715இல் Central Board of Direct Taxes (‘CBDT’) -இன் படி, உள்நாட்டு யுனிட் ஹோல்டர்களுக்கு அவர்களின் யுனிட்களை மீட்கும் போது முதலீடு லாபங்களிலிருந்து அவர்களுக்கு வரி செலுத்த தேவையில்லை.
(ii) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு
நீண்ட கால முதலீடு லாபங்கள்
நிதி சட்டம் 2007க்கு {Clause 1 (b) (i) (D)} முதல் திட்டத்தின் பகுதி 2இன் படி, மியூச்சுவல் ஃபண்ட் நீண்ட கால முதலீடு லாபங்களில் 20% வரி விதிக்கப்படுகிறது.
குறைந்த கால முதலீடு லாபங்கள்
நிதி சட்டம் 2007க்கு {Clause 1 (b) (i) (K)} முதல் திட்டத்தின் பகுதி 2இன் படி, மியூச்சுவல் ஃபண்ட் குறைந்த கால முதலீடு லாபங்களில் 30% வரி விதிக்கப்படுகிறது.
மேலும் ஒரு கல்வி வரி 2%ம் மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி வரி 1% ம் வரி மற்றும் கூடுதல் கட்டண தொகையாக மேலே குறிப்பிட்ட படி வசூலிக்கப்படுகிறது.
(iii) ஒரு உள்நாட்டு நிறுவனம் தவிர மற்றவை:
நீண்ட கால முதலீடு லாபங்கள்
நிதி சட்டம் 2007க்கு {Clause 2 (b) (viii)} முதல் திட்டத்தின் பகுதி 2இன் படி, மியூச்சுவல் ஃபண்ட் நீண்ட கால முதலீடு லாபங்களில் 20% வரி விதிக்கப்படுகிறது.
குறைந்த கால முதலீடு லாபங்கள்
நிதி சட்டம் 2007க்கு {Clause 2 (b) (ix)} முதல் திட்டத்தின் பகுதி 2இன் படி, மியூச்சுவல் ஃபண்ட் குறைந்த கால முதலீடு லாபங்களில் 40% வரி விதிக்கப்படுகிறது.
(iv) வெளிநாட்டு ஸ்தாபன முதலீட்டாளர்கள் (FIIs):
வெளிநாட்டு ஸ்தாபன முதலீட்டாளர்கள் (FIIs)க்கு, சட்டப்பிரிவு 196 D (2) இன் கீழ் முதலீட்டு லாபத்திலிருந்து யுனிட்களை மீட்கும் போது வரி என எதுவும் செலுத்தப்படுவதில்லை.
கல்வி வரி மற்றும் கூடுதல் கட்டணம்::
பொருத்தமான கூடுதல் கட்டணங்களுக்கு வரிசலுகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கல்வி வரி 2%ம் மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி வரி 1% ம் வரி மற்றும் கூடுதல் கட்டண தொகையாக வசூலிக்கப்படுகிறது.
ஈக்வெட்டி சார்ந்த ஃபண்டுகளுக்கு சில பொதுவான ஒதுக்கப்படும் பணம் மற்றும் ஈக்வெட்டி சார்ந்த ஃபண்டுகள் தவிர மற்றவை
1. இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் (DTAA)
1995 அக்டோபர் 30 அன்று தேதியிடப்பட்ட CBDT சுற்று எண் 728இன் படி, ஒரு DTAA வலியுறுத்தும் a ஒரு நாட்டிற்கு பணம் அனுப்பினால், அதற்கான ஆண்டில் நிதி சட்டத்தில் கொடுக்கப்பட்ட விகிதம் அல்லது DTAAஇல் கொடுக்கப்பட்ட விகிதத்தில் எது சொத்துடையவருக்கு அதிக நன்மை கொடுக்குமோ அதனைப் பொருத்து வரி விலக்கு அளிக்கப்படும். ஒரு குறைந்த விகிதத்தில் யுனிட் ஹோல்டர் DTAAஇன் கீழ் சலுகைப் பெற, யுனிட் ஹோல்டர் அவருடைய சொத்து மதிப்பீட்டு அதிகாரியிடமிருந்து இவர் குறைந்த விகிதத்திற்கு தகுதியானவர் என மியூச்சுவல் ஃபண்டுடன் சான்றிதழையும் பெற வேண்டும்.
2. குறைந்த கால முதலீட்டு இழப்புகள்
பிரிவு 94(7) -இன் படி, எந்த நபரும் டிவிடெண்ட் அறிவிப்பில் பதிவு தேதிக்கு முன் 3 மாதத்திற்குள் யுனிட்களை ஈட்டினால் அல்லது வருமான விநியோகத்தில் மற்றும் பதிவு தேதியிலிருந்து 9 மாதத்திற்குள் அதனை விற்றால் அல்லது மாற்றினால், இழப்புகள் அதன் விற்பனையிலிருந்து நீட்டிப்பு வருமானம் பெறப்பட்டது அல்லது பெறக்கூடிய அதன் யுனிட்கள் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டு, அவருடைய வருமானத்தை வரி விதிக்கும் நோக்கத்திற்காக கணக்கிடுவது தவிர்க்கப்படுகிறது.
மேலும், பிரிவு 94(8) இன் படி, கூடுதல் யுனிட்கள் எந்த நபருக்கும் அவர் ஏற்கனவே வைத்திருக்கும் யுனிட்களை அடிப்படையில் எந்தத் தொகையுமின்றி வழங்கப்படுகிறது, பின் அசல் யுனிட்களில் விற்றதில் நட்டத்தை வருமான வரி விதிக்கப்படும் நோக்கத்திற்காக கணக்கீட்டில் தவிர்க்கப்படுகிறது, அசல் யுனிட்கள் பதிவு தேதிக்கு முன் 3 மாதங்களுக்குள் ஈட்டப்பட்டால் கூடுதல் யுனிட்களின் வரவுக்கு 9 மாதத்திற்குள் பதிவு தேதியிலிருந்து விற்கப்படும். எனினும், தவிர்க்கப்பட்ட நட்டம் கூடுதல் யுனிட்களை விற்பனை தேதியில் அந்த நபரால் வாங்கப்படும் தொகையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
3. ட்ரஸ்ட் மூலம் முதலீடு:
மியூச்சுவல் ஃபண்ட் தரத்தில் யுனிட்களில் முதலீடு செய்வது பிரிவு 11(5) மற்றும் பிரிவு 13இன் கீழ் வருமான வரி விதி 1962 இன், விதி 17C(i)உடன் பொது மதம் & தர்ம சேவை ஸ்தாபன ட்ரஸ்ட்களுக்கு இது முதலீடு என தகுதி பெறுகிறது.
4. சொத்து வரி
சொத்து வரி சட்டம் 1957 இல் பிரிவு 2(ea)இன் கீழ் மியூச்சுவல் ஃபண்ட் யுனிட்கள் 'சொத்து' என்ற வரையறையின் கீழ் வருவதில்லை மற்றும் முதலீடு செய்யப்பட்ட யுனிட்கள் சொத்துவரியிலிருந்து முழுவதும் விலக்கு அளிக்கப்படுகிறது.
5. வெகுமதி வரி
வெகுமதி வரி சட்டம் 1958, 1 அக்டோபர் 1998 அன்று அல்லது அதற்கடுத்த நாளிலிருந்து வெகுமதிகளுக்கு வெகுமதி வரி விதித்தலை இரத்து செய்தது. எனவே, 1 அக்டோபர் 1998 அன்று அல்லது அதற்கு பின் வெகுமதி யுனிட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், சில விதிவிலக்காக ரூபாய் 50,000க்கும் அதிகமாக வெகுமதி அளித்தால் வெகுமதி பெறுபவரின் வருமானமாக சட்டப் பிரிவு 2(24) (xiv) மற்றும் சட்டப்பிரிவு 56(2)(vi)யுடன் வரி விதிக்கப்படுகிறது.