|
 |
|
|
மியூச்சுவல் ஃபண்ட் துறையில் தனித்துவத்துடன் இயங்கிவரும் UTI AMC, இந்தியாவில் தனது சந்தையியல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக, மேம்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
மக்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்கும் வகையில், இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு திறன் மிக்க சுய முன்னேற்றத்தின் மீது நாட்டம் கொண்ட நிபுணர்களை, நிறுவனம் வரவேற்கிறது.
தாங்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து பணியாளர்கள் பெருமை கொள்ளும் வகையில், அவர்களுக்கான பணிசூழலை UTI AMC நிறுவனத்தில் அளிக்க உறுதி கொண்டுள்ளோம். பணியிலும், தனிப்பட்ட முறையிலும் பணியாளர்கள் வளர்ச்சிகளை எட்டுவதற்கு வாய்ப்பளிக்கும் சூழலை அளிக்கிறோம். சாதாரணமாக வாழ்வதை விட மேம்பட்ட நிலையை அடைய வேண்டுமென நீங்கள் விரும்பினால், உங்களுக்கான சரியான இடத்தை நாங்கள் அளிக்கிறோம். எங்கள் குழுவில் ஒரு அங்கமாக இருப்பதற்கு, ஆர்வமுள்ளவர்களை எதிர்பார்க்கிறோம்.
பணி மரபு
பணியாளர்களை ஊக்குவித்து, அவர்களது தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றி சாதிக்க துணை புரிவது பணிச்சூழல்கள் தான் என்பதில் உறுதியாக உள்ளோம். நிறுவனம் மற்றும் பணியாளர்களின் திறன் ஒன்று சேர்ந்து ஒரே திசையை நோக்கி பயணித்தால், வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள், வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிகள் பிரகாசிக்கும்.
UTI Mutual Fund -இல் கடைபிடிக்கப்படும் பணி மரபு மிக எளிமையானது – வேலை முதன்மையானது, பின் மற்றவை. பணியாளர்களுடனான எங்கள் உறவு இரு வழிகளில் பயனளிக்கும், அவர்களது சிறந்தவற்றை அளிப்பர், எங்களது சிறந்தவற்றை அவர்களுக்கு அளிப்போம். இதன் மூலம் வேலையில் சரியான விகிதத்தை கடைபிடித்து வளர்ச்சி காண்போம்.
பணியாளர்களுக்கான நலன்கள்
- சிறந்த சம்பளம்
- வசதியான பணிச்சூழல்
- வேலைக்கான சிறந்த வாய்ப்புகள்
- காப்பீட்டு நலன்கள்
- பொழுதுபோக்கு வசதிகள்
|
|
| உங்களைப் பற்றிய விவரங்களை நிரப்புங்கள், உங்களைத் தொடர்பு கொள்வோம். |
|
|
 |
|